Tuesday, March 27, 2018

புற்று நோயை துறத்தும் தற்பூசணி(Water Melon)



தர்பூசணி பழத்தில் அதிகளவு தண்ணீர் அளவு உள்ளதால் கோடை காலத்தில் மக்கள் இதை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.

வெயிலின் தாகம் தீர்க்கும் இயற்கை தந்த கொடையாகவும் விலை மலிவுள்ள பழமாகவும் கிடைப்பதால் அனைவரும் இதை வாங்கி உண்ணலாம்.

தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்:
தர்பூசணி ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்குஉடல் ஆரோக்கியமாகும், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

கண் அழுத்த நோய், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடு குணமாகும்.

முடி கொட்டுதல் தொல்லையில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்படும்.

நெஞ்செரிச்சலாக இருக்கும் நேரத்தில் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிட்டால் எரிச்சல்நீங்கிவிடும்.

இதில் நார் சத்துக்குள் மற்றும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால்மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

இதில் உள்ள பிளவனாய்டு, கரோட்டினாய்டு நிறமிகளால் கட்டி, வீக்கம் போன்றவை குணமாகும்.

இதில் உள்ள லைகோபீன் பெருங்குடல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை ஏற்படுவதை தடுக்க உதவியாக இருக்கும்.

0 comments:

Post a Comment