Tuesday, March 27, 2018

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்... பெண்களே உஷார்



Cervical Cancer என்பது பெண்களை அதிக அளவில் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இந்த வைரஸானது உறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்களுக்கு பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பகட்டத்திலேயே இந்த வைரஸின் தாக்கம் பெண்களுக்கு தெரியவருவதில்லை. மாறாக, பெண்களின் உடலிலேயே தங்கியிருக்கும் இந்த வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று தெரிந்துகொள்ளுங்கள்

அறிகுறிகள்

கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டமானது தடைபடும் போது கால்களில் வலி, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுவே முதல்நிலை அறிகுறியாகும்.
பெண்ணுறுப்பிலிருந்து அதிகமான திரவம் துர்நாற்றத்துடன் வெளிப்படுவது
பெண்களின் உடலில், திடீரென்று ஏற்படும் இரத்தபோக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், வலியும் உண்டாகி அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.
பாலியல் ரீதியான உறவின் போது வலி ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
தடுக்கும் முறைகள்

10 முதல் 11 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியினை கட்டாயம் போட வேண்டும். அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் 45 வயதிற்குள்ளாக போட்டு கொள்ளவேண்டும்.
கர்ப்பபையில் ஏற்படும் தொற்றுகள், வெள்ளைப் படுதல் போன்றவற்றினை அலட்சியப் படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்.

1 comments:

Post a Comment